/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்ட விழிப்புணர்வு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்ட விழிப்புணர்வு
ADDED : ஜூன் 30, 2025 12:19 AM
திருப்பூர்; தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் கிளை சங்கம் சார்பில், அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துர்க்கப்பன் வரவேற்றார். திருப்பூர் புதிய, மத்திய பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் செயல்படும் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் வாகனம் கட்டணமின்றி நிறுத்துவதற்கு இடவசதி செய்து தரவேண்டும்.
விண்ணப்பம் அளித்து காத்திருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.