/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிரிக்கெட் போட்டியில் அரசுப்பள்ளி 3ம் இடம்
/
கிரிக்கெட் போட்டியில் அரசுப்பள்ளி 3ம் இடம்
ADDED : செப் 04, 2025 11:58 PM

பல்லடம்; முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், சமீபத்தில், திருப்பூரில் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து, 165 அரசு தனியார் பள்ளி அணிகள் அதில் பங்கேற்றன.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், திருப்பூர் ஏ.கே.ஆர்., பள்ளி அணி, 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாமிகவுண்டம்பாளையம் அரசு பள்ளி அணி, கூடுதல் ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தை தக்க வைத்தது.
வெற்றி பெற்ற சாமிகவுண்டம்பாளையம் பள்ளி அணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டியில், சிறந்த ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவன் யுவராஜ், மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். நேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் பிராங்கிளின், உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்னரசி, கிருபாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.