/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலக சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை
/
உலக சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை
ADDED : ஜூன் 04, 2025 01:48 AM

வெள்ளகோவில்; நேபாளத்தில் நடந்த சிலம்ப போட்டியில், வெள்ளகோவில் ஊராட்சி பள்ளி மாணவன் வெற்றி பெற்றார்.
சர்வதேச இளைஞர் விளையாட்டு மற்றும் பள்ளிகள் கூட்டமைப்பு அனுமதியுடன் நேபாளம் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில், சர்வதேச அளவிலான சிலம்ப விளையாட்டு நடத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், 12 வயதுக்குட்பட்ட, 41 முதல், 45 கிலோ எடைப்பிரிவில், திருப்பூர், வெள்ளகோவில், கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் சபரிவாசன், முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். இப்பிரிவில், 356 பேர் பங்கேற்ற நிலையில், திருப்பூர் மாணவன் சாதனை படைத்துள்ளார்.