/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீச்சலில் 3 தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்
/
நீச்சலில் 3 தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்
ADDED : அக் 24, 2024 11:52 PM

கோவாவில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்று, அவிநாசியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் அசத்தியுள்ளார்.
இந்தியா பாரா ஒலிம்பிக் கமிட்டி, மத்திய மனித வள மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கோவா விளையாட்டு ஆணையம் ஆகியன சார்பில், கடந்த 19 முதல், 22ம் தேதி வரை கோவாவில், தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
இதில், அவிநாசி, அவிநாசிலிங்கம் பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் சபரிஆனந்த் சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். 50 மற்றும் 100 மீ., ப்ரீ ஸ்டைல், 50 மீ., பேக் ஸ்டோக் ஆகிய மூன்று பிரிவுகளில் அசத்திய சபரிஆனந்த், மூன்றிலும் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார்.
அவிநாசிலிங்கம்பாளையம் ராஜா - சசிகலா தம்பதியின் மகனான, சபரிஆனந்த், 12. முதுகு தண்டுவட பாதிப்பில் சிரமப்பட்டு வருகிறார். இருப்பினும், தேசிய போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்று, திறமை காட்டியுள்ளார்.
கோவாவில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் வந்திறங்கிய மாணவர் சபரி ஆனந்த்தை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், நீச்சல் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.