/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
102 நிமிடம் சிலம்பம் சுற்றிய அரசுப்பள்ளி மாணவர்கள்
/
102 நிமிடம் சிலம்பம் சுற்றிய அரசுப்பள்ளி மாணவர்கள்
102 நிமிடம் சிலம்பம் சுற்றிய அரசுப்பள்ளி மாணவர்கள்
102 நிமிடம் சிலம்பம் சுற்றிய அரசுப்பள்ளி மாணவர்கள்
ADDED : மே 06, 2025 06:42 AM

பல்லடம்; கேத்தனுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 102 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
பல்லடம் அடுத்த கேத்தனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'நோபல்' உலக சாதனைக்கான நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்ற ஆரம்பித்தனர். தொடர்ந்து, 102 நிமிடங்கள் சிலம்பம் சுற்றினர்.
முன்னதாக, உழவன் வடிவில் வரையப்பட்ட ஓவியத்தின் மீது, மாணவ, மாணவியர் அனைவரும் நின்றபடி, சிலம்பம் சுற்றினர். இந்த நிகழ்வு முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பங்கேற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.