/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீநவா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ஸ்ரீநவா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மே 12, 2025 03:48 AM
திருப்பூர்; முத்துார், ஸ்ரீ நவா கல்வியியல் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தாளாளர் சண்முகம் தலைமை வகித்தார். முதல்வர் தீபா வரவேற்றார். செயலாளர் சக்திவேல், செயல் இயக்குநர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ராஜ்மோகன், பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினர், முன்னாள் ஐ.ஜி., பாரியை அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னாள் ஐ.ஜி., பாரி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது: ஆசிரியப் பணி என்பது மேன்மை மிகுந்தது. ஆசிரியர்களாக பணியாற்றுவோர் சிறப்பான குணங்களையும், சிறந்த நற்பண்புகளையும், எளிமையான கற்றல் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி பொது அறிவையும் ஒரு ஆசிரியராக இருந்து தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். கற்பிக்கும் எந்த பாடத்தையும் அதன் பொருளை உணர்ந்து, மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் மற்றும் விவேகானந்தா கல்வி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.