/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்
ADDED : செப் 19, 2025 10:08 PM
வெள்ளகோவில்; வெள்ளகோவில் அருகே, உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளகோவில் பகுதியில் சட்ட விரோதமாக, கற்கள், மண் மற்றும் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். முத்துார் - காங்கயம் ரோடு செட்டியார்பாளையம் பகுதியில் கிராவல் மண் லோடு ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி சோதனையிடப்பட்டது.
அதில் எந்த உரிய ஆவணங்களும் இல்லை. அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை, வெள்ளகோவில் போலீசில் ஒப்படைத்தனர்.
லாரி முத்துார், புதுப்பாளையத்தைச் சேர்ந்த லீலாவதி, 45, என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.