/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதரின் நடுவில் மயானம்; துாய்மையாவது எப்போது?
/
புதரின் நடுவில் மயானம்; துாய்மையாவது எப்போது?
ADDED : நவ 27, 2024 09:25 PM

உடுமலை; உடுமலை அருகே குறிஞ்சேரி ஊராட்சியில், மயானத்தை சுற்றிலும் புதர்க்காடாக வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி, துாய்மைப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட குறிஞ்சேரி ஊராட்சியில், ஒரே கிராமம் மட்டுமே உள்ளது. அப்பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு, கிராமத்தின் எல்லையில் மயானம் உள்ளது.
இறந்தவர்களின் இறுதி சடங்குகள் செய்யும் இடம் முழுவதும், புதர் செடிகளாக வளர்ந்து படர்ந்துள்ளது. இதனால் விஷப்பூச்சிகள் அடிக்கடி வெளியே வந்து செல்கின்றன. இறுதிச்சடங்கு செய்ய வரும் பலரும், இந்த சூழலால் அச்சத்துடன் அப்பகுதியில் நிற்க வேண்டியுள்ளது. மாலை நேரங்களில், பொதுமக்கள் உள்ளே செல்வதற்கும் முடியாத நிலையில் தான் உள்ளது.
கிராமத்தின் அடிப்படை தேவையாக உள்ள மயானம், பராமரிப்பில்லாமல் இருப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகத்தினர் மயானத்தை முழுயைாக துாய்மைப்படுத்தி, பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.