ADDED : ஆக 31, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த மிளகாய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு சீசனில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடி பரப்பு குறைந்ததால் மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மிளகாய்க்கு தற்பொழுது நல்ல விலை கிடைக்கிறது.
மொத்த வியாபாரிகள் கிலோ, 50 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இவை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
திருப்பூர் உழவர் சந்தையில் கிலோ, 60 முதல், 70 ரூபாய் வரை விற்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

