/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பச்சை மிளகாய் விலையில் காரமில்லை
/
பச்சை மிளகாய் விலையில் காரமில்லை
ADDED : நவ 21, 2024 11:53 PM
திருப்பூர்; கடந்த ஒரு வாரமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை பதிவாகி வருகிறது. அவ்வப்போது துாறல் மழை பெய்து விடுகிறது. வெயில் குறைந்து, குளிர் நிலவுவதால், செடிகளில் இருந்து பறிக்கப்படும் பச்சைமிளகாய் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'செடியில் இருந்து பறித்த ஒரு நாள் பளிச்சென இருக்கும். இரண்டு நாளில் விற்று விட வேண்டும்; இல்லையேல் பழுத்து விடும். மூட்டையை விட்டு அவிழ்க்காமல், ஈரப்பதத்துடன் அல்லது தண்ணீர் மிளகாய் நனைந்து விட்டால், பழுத்துவிடும். சீசன் துவக்கம் என்பதால், வரத்து அதிகம். முகூர்த்த தினங்கள் இல்லாததால், விற்பனை மந்தமாகியுள்ளது. எனவே, விலை குறைந்து கிலோ, 23 முதல், 28 ரூபாய்க்கு விற்கிறது,' என்றனர்.