/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிரீன் பார்க் ஸ்மார்ட் பள்ளி மாணவர்கள் அபார சாதனை
/
கிரீன் பார்க் ஸ்மார்ட் பள்ளி மாணவர்கள் அபார சாதனை
ADDED : மே 14, 2025 11:26 PM
திருப்பூர்; திருப்பூர், வேலாயுதம்பாளையம், அலகுமலை, கிரீன் பார்க் ஸ்மார்ட் பள்ளி மாணவர் பிரவீன், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்ச்சி முடிவில், 500 க்கு, 488 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ், கணிதம், சமூக அறிவியலில், 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பள்ளி தாளாளர் அலோசியஸ் கூறியதாவது:
மாணவர் பிரவீனுக்கு பாராட்டுக்கள்; எங்கள் பள்ளியில் படித்த அனைத்து மாணவ, மாணவியரும் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றிக்கு அயராது உழைத்த இருபால் ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் இத்தருணத்தில் பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளது.
பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தும் விதமாக பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அனைத்து வகுப்பறைகளை கணினிமயமாக்குவதோடு, மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்யும் விதமாக செயல்படுகிறோம்.
குறிப்பாக, விளையாட்டு, சிறப்பு பயிற்சிகள் போன்ற விஷயங்களில் கிரீன் பார்க் ஸ்மார்ட் பள்ளி கிராமப்புற சூழலிலும் சிறப்பாக செயல்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.