/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனத்துக்குள் திருப்பூரில்' உருவாகும் பசுமை பூங்கா; குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்வம்
/
'வனத்துக்குள் திருப்பூரில்' உருவாகும் பசுமை பூங்கா; குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்வம்
'வனத்துக்குள் திருப்பூரில்' உருவாகும் பசுமை பூங்கா; குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்வம்
'வனத்துக்குள் திருப்பூரில்' உருவாகும் பசுமை பூங்கா; குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்வம்
ADDED : செப் 01, 2025 10:17 PM

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், குடியிருப்போர் சங்கம் சார்பில், பூங்கா ஒதுக்கீட்டு இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், வெற்றி அமைப்பு சார்பில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டு, வனத்துக்குள் திருப்பூர் - 11 வது திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து, கடந்த மார்ச் மாதம் பணி துவங்கியது. இதுவரை மாவட்டம் முழுவதும், 1.47 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
உடுமலை பகுதிகளில், விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் ஆர்வம் காரணமாக, 60 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நடவு செய்யப்பட்டு, இலக்கை நோக்கிய பயணம் வேகமெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பெரியகோட்டை ஊராட்சி மின்நகர் பகுதியில், குடியிருப்போர் நல சங்கம் சார்பில், பூங்கா ஒதுக்கீடு நிலத்தை பசுமையாக்கும் வகையில், கருமருது, நாவல், அரளி, புங்கன், அத்தி, இலுப்பை, பலா, செண்பகம், புன்னை, சொர்க்கம், பூந்தி கொட்டை என மண்ணின் மரபு சார்ந்த மற்றும் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், 130 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், விஜயவிநாயகர் கோவில் தலைவர் முத்துச்சாமி, மின் நகர் குடியிருப்போர் நல சங்கத்தலைவர் சுப்ரமணியம், பொருளாளர் தமிழ்ச்செல்வன், வருண் டெக்ஸ்டைல்ஸ் பாலசுப்ரமணியம், சுஜெய் சொட்டு நீர் பாசனம் நிறுவனத்தைச்சேர்ந்த மெய்யப்பன் மற்றும் குடியிருப்போர் பங்கேற்றனர்.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், தொழிற்சாலை, கோவில், பள்ளி வளாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
மரக்கன்றுகள் நடவு செய்து, மரமாக வளர்த்து, பசுமை பயணத்தில் இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.