ADDED : மார் 19, 2024 12:11 AM

திருப்பூர்;அனைத்து மாவட்டங்களிலும், வாரந்தோறும் திங்கள் கிழமை, கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில், 400 முதல் 500 மனுக்கள் வரை பெறப்படும்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறையால், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம்; மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும், மிக முக்கியமான மற்றும் அவசரமான பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல், மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக முன்பகுதியிலும், குறைகேட்பு கூட்ட அரங்கம் முன்பு என இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
திங்கள் கிழமையான நேற்று, பொதுமக்கள் ஏராளமானோர், வரிசையில் நின்று, குறைகளை மனுவாக எழுதி, பெட்டிக்குள் போட்டுச்சென்றனர்.
