/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகேட்பு கூட்டம் 306 மனுக்கள் பதிவு
/
குறைகேட்பு கூட்டம் 306 மனுக்கள் பதிவு
ADDED : டிச 04, 2025 06:43 AM
- நமது நிருபர் -
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, பொதுமக்களிடமிருந்து 306 மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில்,வெற்றி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க தலைவர் சக்கரையப்பன், மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனு:
உடுமலை தாலுகாவில், மாற்றுத்திறனாளிகள், வாடகை வீடுகளில், சிரமமான சூழலில் வசித்துவருகின்றனர். 145 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு, ஐந்து ஆண்டுகளாக கலெக்டரிடம் மனு அளித்து வருகிறோம்.
சோமவாரப்பட்டியில் 100 பேர், சின்ன வீரம்பட்டியில் 25 பேர், எலையமுத்துாரில் 65 பேர் ஆகியோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்காமல், ஒதுக்குகின்றனர். மாற்றுத்திறனாளிகள் 145 பேருக்கு பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஊத்துக்குளி தாலுகாவில், 93 மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டு நுாறு நாட்களுக்கு மேலாகிறது; அந்த இடத்தை அளந்து கொடுக்காமல் இழுக்கின்றனர்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
குறைகேட்பு கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் வழங்கிய மொத்தம் 306 மனுக்கள், பதிவு செய்யப்பட்டன.

