தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தரைமட்ட பாலம் கட்டுமான பணி இழுபறி எச்சரிக்கை பலகை இல்லாமல் சிக்கல்

 தரைமட்ட பாலம் கட்டுமான பணி இழுபறி எச்சரிக்கை பலகை இல்லாமல் சிக்கல்

 தரைமட்ட பாலம் கட்டுமான பணி இழுபறி எச்சரிக்கை பலகை இல்லாமல் சிக்கல்


ADDED : ஜன 29, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை அருகே, நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் தரைமட்ட பாலம் கட்டும் பணி இழுபறியாக நடப்பதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது; உரிய எச்சரிக்கை பலகை வைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், உடுமலை பகுதியில், சில பணிகள் பல ஆண்டுகளாக இழுபறியாக உள்ளது.

குறிப்பாக, தாராபுரம், பல்லடம் மாநில நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலை சந்திக்கும் பகுதியில், உயர் மட்ட பாலம் கட்டும் பணி நீண்ட காலமாக நடக்கிறது.

தாராபுரம் உயர் மட்ட பாலம் கட்டும் இடத்தில், அணுகுசாலையும், மாநில நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில், தரைமட்ட பாலம் கட்ட குழி தோண்டப்பட்டது.

பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது; கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதுடன், ரோட்டையொட்டி, பாலத்துக்கு தோண்டப்பட்ட குழி உள்ளதால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

அந்த இடத்தில், எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கவில்லை; தடுப்புகளும் ஏற்படுத்தவில்லை.

இதனால், அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. அணுகுசாலை, மாநில நெடுஞ்சாலை சேரும் இடத்தில், தார்ரோடு போடாததால், மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால், மண்பாதை வழியாக வாகனங்கள் சென்று, அப்பகுதியே பள்ளமாக மாறி விட்டது. அதே போல், செஞ்சேரிமலை ரோட்டில், நான்கு வழிச்சாலை பாலத்தை கடந்ததும், ரோடு பள்ளமாக மாறி விட்டது.

அங்கும், தார்ரோடு அமைக்கப்படாமல் மழைக்காலங்களில், வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியை கடக்க திணறி வருகின்றனர். விரைவில், இப்பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் நிறைவு செய்ய வேண்டும்; பணிகள் நடைபெறும் இடத்தில், தேவையான எச்சரிக்கை பலகை வைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us