ADDED : டிச 26, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு, வரும் 2025, ஏப்., 24ல் நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் ஜன., 3ல் துவங்க உள்ளது.
இப்பயிற்சியில், மாதம் இரண்டு மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும். இலவச பயிற்சியில் சேர விரும்புவோர், தங்கள் பெயரை, மாவட்ட வேலவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990 55944 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு பதிவு செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.