ADDED : பிப் 10, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார் ஊராட்சி முன்னாள் ஊராட்சி தலைவர் சாந்தாமணி மற்றும் முன்னாள் துணை தலைவர் வேலுசாமி ஆகியோர், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:
எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 35 லட்சம் ரூபாயில், பொடாரம்பாளையத்தில் பொதுகழிப்பிடம், சி.எஸ்.ஐ., காலனியில் ரோடு, வலசுப்பாளையத்தில் கான்கிரீட் ரோடு போடுவதற்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. பணிகளை துவக்குவதாக கூறிய கான்ட்ராக்டர், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பணிகளை மேற்கொள்ளவில்லை. மக்கள் சிரமப்படுகின்றனர். பணிகளை விரைந்து மேற்கொள்ள கலெக்டர் எடுக்க வேண்டும்.

