/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி., நிலுவை 'சைமா' அறிவுறுத்தல்
/
ஜி.எஸ்.டி., நிலுவை 'சைமா' அறிவுறுத்தல்
ADDED : மார் 21, 2025 11:58 PM
திருப்பூர்; தமிழ்நாடு ஜி.எஸ்.டி., வரிச்சட்டத்தில், வரிவிதிப்பு சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2017 -18, 2018-19, 2019 -20 ஆகிய மூன்று ஆண்டுகளில், வட்டி மற்றும் அபராத வட்டி இல்லாமல், நிலுவை வரித்தொகையை மட்டும் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான, ஆன்லைனில் படிவங்களை சமர்ப்பிப்பது தொடர்பான பயிற்சி கூட்டம், ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் 10 ம் தேதி நடந்தது. ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர், நேற்று முன்தினம், 'சைமா' நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்தார்.
இதுகுறித்து 'சைமா' நிர்வாகிகள் கூறுகையில், 'தமிழக அரசு திட்டத்தில், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி., வரியினங்களை, வட்டி மற்றும் அபராத வட்டியில்லாமல் செலுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்க, 31 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்மீது நடவடிக்கை எடுத்து, ஜூன் 31 ம் தேதிக்குள் விலக்கு பெறலாம் என அறிவித்துள்ளனர். அதற்காக, உதவி மையம் அமைக்கப்படுமென, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளில், ஜி.எஸ்.டி., நிலுவை வைத்துள்ளவர்கள், உரிய கால அவகாசத்தை பயன்படுத்தி, வட்டி, அபராத வட்டியில்லாமல் நிலுவையை செலுத்தி பயன்பெறலாம். அதற்காக, சங்க உறுப்பினர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளோம்,' என்றனர்.