/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மல்பெரியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்
/
மல்பெரியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்
மல்பெரியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்
மல்பெரியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்
ADDED : டிச 29, 2025 05:27 AM

உடுமலை: 'மல்பெரி செடிகளில் இலைப்பேன் தாக்குதலை தவிர்க்க, கவாத்து செய்யும் போது மீதியான பழைய இலைகளை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்,' என, பட்டு வளர்ச்சித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக மல்பெரி செடிகள் பராமரிக்கப்படுகிறது. தொடர் மழைக்கு பின், மல்பெரி செடிகளை கவாத்து செய்யும் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தரமான மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டு கூடு உற்பத்திக்கு ஆதாரமாகும்.
எனவே, இலைப்பேன் உள்ளிட்ட நோய்த்தாக்குதல்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என பட்டு வளர்ச்சித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது:
இலைப்பேன் பரவிவிட்டால் கட்டுப்படுத்துவது சிரமம். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பலன் தராது. எனவே, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளை பின்பற்ற வேண்டும். மல்பெரி செடிகளை கவாத்து செய்யும் போது, மீதியான பழைய இலைகள் எதுவும் இல்லாமல், சுத்தமாக அகற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்ட தோட்டங்களில் இருந்து கீழே விழும் இலைகளில் இலைப்பேன் முட்டைகள், இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் காணப்படும். இப்பூச்சி தாக்குதலால், பாதிக்கப்பட்ட தோட்டத்தை கவாத்து செய்யும் போது, பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து எரிக்க வேண்டும்.
அல்லது, எருக்குழிகளில் இட்டு மக்க வைக்க வேண்டும். செடிகளுக்கு தேவையான தொழு உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் இடும் போது பூச்சிகளின் தாக்குதலை எதிர்க்கும் சக்தியை மல்பெரி செடிகள் இயற்கையாகவே பெற்றுக்கொள்கின்றன. சரியான இடைவெளியில் தேவையான அளவு நீர்ப்பாசனம் செய்வதால் இலைப்பேன்களில் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு குறைக்கிறது.
இவ்வாறு, கூறினர்.

