UPDATED : ஆக 30, 2026 11:19 PM
ADDED : ஆக 30, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
பெருமாநல்லுார்:திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டியில், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 192-வது பவளக்கொடி கும்மி அரங்கேற்ற விழா நடந்தது.
மூத்த ஆசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் செல்வகுமார், பழனிசாமி, சுப்பிரமணியம், கார்த்திக் முன்னிலை வகித்தனர். கலை வளர் மணி விருது பெற்ற பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை சார்பில், 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடினர். விழா ஏற்பாடுகளை ராக்கியாபட்டி பொதுமக்கள், கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
.
