/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் கொலை 3 பேர் மீது குண்டாஸ்
/
வக்கீல் கொலை 3 பேர் மீது குண்டாஸ்
ADDED : ஆக 31, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 41; ஐகோர்ட் வக்கீல். இவருக்கும், சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த மாதம் 28ம் தேதி முருகானந்தத்தை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக, பள்ளித்தாளாளரான சித்தப்பா தண்டபாணி உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் உள்ள தண்டபாணி, தட்சிணாமூர்த்தி, நாட்டுதுரை என, மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., பரிந்துரையின் பேரில், கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார். மூன்று பேரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.