sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குருவருளும், திருவருளும் துணை நிற்கும்

/

குருவருளும், திருவருளும் துணை நிற்கும்

குருவருளும், திருவருளும் துணை நிற்கும்

குருவருளும், திருவருளும் துணை நிற்கும்


ADDED : அக் 13, 2024 05:45 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள்:

தலையாய செல்வம் கல்வி

ஒவ்வொரு பெற்றோரும், தனது குழந்தைகள், 16 வகை செல்வங்களையும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். அத்தகைய, 16 செல்வங்களில் தலையாயது கல்வி; கல்விச்செல்வம் வந்துவிட்டால், மற்ற செல்வங்கள் தானாக வந்து சேர்ந்துவிடும்.

'தினமலர்' நாளிதழ், ஸ்ரீசக்தி கல்விக்குழுமம் ஏற்பாட்டில், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், ஏராளமான குழந்தைகள், தங்கள் கல்வி பயணத்தை துவக்கினர். பண்டிதர்களின் வேத பாராயணம், யாக பூஜையுடன் கல்வி கற்றல் துவங்கியுள்ளது. குழந்தைகள், கல்வியுடன் மெய்ஞ்ஞானத்தையும் வளர்த்து வளமுடன் வாழ்வார்கள்.

- சிவராம்

'வெற்றி' அறக்கட்டளை தலைவர்

***

கலாசாரம் முக்கியமானது

பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு நமது கலாசாரத்தை கற்றுத்தர வேண்டும்; பெரும்பாலும், குழந்தைகளுக்கு மனதிலும், எண்ணத்திலும், கலாசாரம் வளர்ந்து விடுகிறது. குழந்தைகள், சிறப்பாக வாழ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகின்றனர்.

குழந்தைகளின் கல்விக்காக அதிகம் பாடுபடுகின்றனர்; நுாற்றுக்கணக்கான குழந்தைகள், இன்று, கல்வி பயணத்தை துவக்கியுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, குழந்தைகளுடன் வந்து, இன்று வித்யாரம்பம் செய்துள்ளனர்.

பெற்றோரின், ஆன்மிக ஈடுபாடு, குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக கட்டமைக்க உதவியாக இருக்கும். ஆன்மிகமும், கல்வியும் ஒவ்வொரு நபர்களையும் சான்றோர்களாக உயர்த்தும். கல்விப்பயணத்தை துவக்கியுள்ள குழந்தைகள், வருங்காலத்தை கட்டமைக்கும் வல்லமை பெற்றவர்களாக உயர வாழ்த்துகள்.

- ஆடிட்டர் ராமநாதன்

திருப்பூர் சாரதாம்பாள்

கோவில் நிர்வாகி

***

திருவருள் கிடைக்கும்

திருப்பூர் ஸ்ரீபுரத்தில், ஐஸ்வர்யா கார்டனில் எழுந்தருளும், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது ;அம்பாளுக்கு, ஒன்பது நாளும், நவாபரண பூஜை நடந்தது; லலிதா சகஸ்ரநாம பூஜையும் நடந்தது.

விஜயதசமி நாளில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீசரஸ்வதி ஸூக்த யாகம், ஸ்ரீஹயக்ரீவர் யாகம் நடத்தி, பண்டிதர்களின் வேத பாராயணத்துடன், வித்யாரம்பம் நடந்துள்ளது.

அம்பாளின் திருவருள், அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும்; அவர்கள் வாழ்வும் சிறக்கும். விஜயதசமி நாளில் கல்வியை துவக்கும் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாகவும், வளமிக்கதாகவும் அமையும். ஜகன்மாதா ராஜராஜேஸ்வரி அம்பாளின் அருட்கடாட்ஷம் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கும்.- ஞானகுரு

ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி

திருக்கோவில் டிரஸ்ட் தலைவர்

கற்றல் திறன் மேம்படும்...

குழந்தைக்கு தாய் யார் என்பதை யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை; அம்மாவுக்கு பின், அனைவருக்கும் முதல் குரு தந்தைதான்; அவர்தான், வாழ்வை கற்றுத்தர வேண்டும். மனதளவில் மகிழ்ச்சியாக வைப்பது மாதா; உடல் ரீதியாக வலுவாக வைப்பது பிதா; இவ்விருவரும் இணைந்துதான், குரு யர் என்பதை காட்டுகின்றனர்.

'கு' என்றால் இருள்; 'ரு' என்றால் நீக்குபவர்; இருளைநீங்கி ஒளியாகி ஞானத்தை வழங்குபவர்தான் குரு. குரு மூலமாகத்தான், இதுதான் தெய்வம் என்வறு அறிய முடிகிறது. இறைவனை அடைய பல வழிகள் இருக்கின்றன.

மழலைகள் யாவரும், அறிவுக்கூடம் என்று கூறப்படும் ஆலயத்தில் நுழைய, வாயில்படிக்கு வந்து, முதல் படியில் இன்று கால் வைத்துள்ளனர். பிரணவத்தை புரிந்துகொள்பவர்கள், உலகத்தை அறிய கொள்ளும் மனநிலையை உடையவராக மாறுவார்கள்.

ஞானத்தையும், அறிவையும் அளிக்கும் வகையில், வித்யாரம்பம் நடக்கிறது. எதையும் விநாயகர் வழிபாட்டுடன் துவக்கினால் வெற்றி நிச்சயம்; எவ்வித தடையாக இருந்தாலும் அகலும். கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதியை வழிபட்டால், கற்றலுக்காக மனம் பக்குவப்படும்; படிப்பது அனைத்தும் ஞானமாக மாறும்.

வித்யாரம்பம் செய்தால், விநாயகர், சரஸ்வதி, ஹயக்ரீவர் வழிபாடு செய்வதன் மூலமாக, குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடும். கல்வியிலும், கலையிலும் ஞானப்பிரகாமான நிலையை அடையலாம்.

- சரவண மாணிக்கம்

கோவில் தலைமை அர்ச்சகர்






      Dinamalar
      Follow us