ADDED : நவ 21, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி போலீசார், திருப்பூர் ரோட்டில், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், கோவை நோக்கி சென்ற சொகுசு பஸ்சில் சோதனையிட்டனர். அதில், திருப்பூர் - விஜயாபுரம், காட்டுப்புதுார் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி மீனாட்சி, 63, என்பவரிடம், 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து, அவரை கைது செய்து, குட்காவையும் பறிமுதல் செய்தனர்.