ADDED : மார் 22, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் - மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பகுதியில் சென்ட்ரல் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு மொபட்டை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 10 கிலோ எடையில், புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், அதை விற்பனைக்கு கொண்டு சென்ற பாண்டி சுடலை, 29, என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.