/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹஜ் புனித பயணம் புத்தறிவு பயிற்சி முகாம்
/
ஹஜ் புனித பயணம் புத்தறிவு பயிற்சி முகாம்
ADDED : ஏப் 19, 2025 11:23 PM

திருப்பூர்: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும், 165 ஹாஜிக்களுக்கான புத்தறிவு பயிற்சி முகாம், தேவராம்பாளையம் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் குபா பள்ளி வாசல் மண்டபத்தில் நடந்தது.
தேவராம்பாளையம் பள்ளி வாசல் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் தாவூதி, துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா, தலைமை வகித்தார். தேவராயம்பாளையம் குபா பள்ளி வாசல் தலைவர் சலீம், முத்தவல்லி உமர்சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனுப்பர்பாளையம் மஸ்ஜிதே சித்திக் பள்ளிவாசல் தலைமை ஹஜ்ரத் அப்துல் வகாப் அன்வாரி, தாராபுரம் மரக்கடை பள்ளிவாசல் தலைமை இமாம் முகம்மது யூசுப் தாவூதி, திருப்பூர் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளிவாசல் தலைமை ஹஜ்ரத் நாஸிர் அகமது ஆகியோர் பேசினர்.

