/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரைகுறையாக நடந்த நல்லாறு துார் வாரும் பணி
/
அரைகுறையாக நடந்த நல்லாறு துார் வாரும் பணி
ADDED : அக் 30, 2025 11:46 PM

திருப்பூர்:  நல்லாறு துார்வாரும் பணி அரைகுறையாக நடந்து முடிந்துள்ளது.
அவிநாசி, திருமுருகன் பூண்டி பகுதிகள் வழியாக கடந்து வரும் நல்லாறு, திருப்பூரின் வடக்கு பகுதியை பெருமளவு கடந்து செல்கிறது.
திருப்பூரைக் கடந்து செல்லும் இந்த ஆறு, நஞ்சராயன் குளத்தில் ெசன்று கலக்கிறது. திருமுருகன் பூண்டியைக் கடந்து செட்டிபாளையம், அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நுழைந்து ெசல்லும் இந்த ஆற்றை பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் 'கபளீ கரம்' செய்துள்ளன.
ஆற்றின் மையம் எது, கரை எது எனத் தெரியாத அளவில் இந்த ஆறு செல்லும் பாதை முழுவதும் முட்செடிகள், புதர்கள், மண் மேடுகள் சூழ்ந்து நீர் செல்வதே தடைபடும் வகையில் இதில் ஆக்கிர மிப்புகள் காணப்படுகின்றன.
பருவ மழைக் காலம் என்பதால் இதில் தண்ணீர் அதிகளவில் வர வாய்ப்புள்ளது;  தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கினால், தாழ்வான பகுதிகளில் புகுந்து அவதி ஏற்படும் நிலை காணப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மாநகராட்சி எல்லையில் ஆற்றில் துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆத்துப்பாளையம் பகுதி வரை பெருமளவு ஆறு துார் வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தடையின்றி பாய்ந்து செல்கிறது. அதன் பின் ஒரு பகுதிக்கு மேல் துார் வாரும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. பெயரளவுக்கு மட்டும் இதை மேற்கொள்ளாமல் முழுமையாக துார் வாரினால் மட்டும் முழு பயன் ஏற்படும். அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, துார் வாரும் பணியை முறையாக செய்து முடிக்க வேண்டும்.

