ADDED : ஜன 01, 2026 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும்.
நேற்று பகலில் அங்கு அரை நிர்வாண கோலத்தில் வந்த வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென அங்கும், இங்கும் ஓடினார்.
பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். உடனே, பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஒரு வழியாக, அந்த நபரை பிடித்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

