/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேல்நிலை வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு துவக்கம்
/
மேல்நிலை வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு துவக்கம்
ADDED : டிச 09, 2024 11:49 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நேற்று துவங்கியது. பத்தாம் வகுப்பு இன்று தேர்வுகள் துவங்குகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களில், ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி, தேர்வுகள் நடக்குமென தமிழக அரசு அறிவித்திருந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு துவங்கியது.
முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. மொழித்தாள் தேர்வுகள் முடிந்து வரும், 12ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன.
இன்று (10ம் தேதி) பத்தாம் வகுப்புகான தேர்வுகள் துவங்குகின்றன. அதனை தொடர்ந்து, ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புக்கு தேர்வுகள் நடக்கும்.
துவக்கப் பள்ளிகளுக்கு, வரும், 16ம் தேதி தேர்வுகள் துவங்குகிறது. வரும், 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, வரும், 24 முதல், ஜன., 1 ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 2025, ஜன., 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.