/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடக்ககல்வி பட்டயத்தேர்வு நாளை முதல் ஹால்டிக்கெட்
/
தொடக்ககல்வி பட்டயத்தேர்வு நாளை முதல் ஹால்டிக்கெட்
ADDED : மே 12, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், நாளை முதல் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். நடப்பாண்டில் மே, ஜூன் மாதம் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை நாளை(14ம்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, நுழைவு சீட்டை பெறலாம். இத்தகவலை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.