/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., பள்ளியில் கையுந்து பந்து போட்டி
/
ஏ.வி.பி., பள்ளியில் கையுந்து பந்து போட்டி
ADDED : டிச 05, 2024 06:23 AM
திருப்பூர்; திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் ஆகியன இணைந்து ஏ.வி.பி.அருள்ஜோதி 19வது நினைவு கையுந்து பந்து போட்டிகளை, பள்ளி வளாகத்தில் நடத்தின. ஏ.வி.பி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 73 அணிகள் பங்கேற்றன.
போட்டிகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடம்பெற்ற அணிகள்:
மிக மூத்தோர் பெண்கள் பிரிவு: வேலவன் பள்ளி; இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி; மூத்தோர் பெண்கள்: திருமுருகன் பள்ளி - ஏ.வி.பி., பள்ளி; இளையோர் பெண்கள்: ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா - ஏ.வி.பி., பள்ளி; மிக மூத்தோர் ஆண்கள்: ஏ.வி.பி., பள்ளி - பெருமாநல்லுார் அரசு பள்ளி; மூத்தோர் ஆண்கள்: ஏ.வி.பி., பள்ளி - ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா; இளையோர் ஆண்கள்: ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா, ஏ.வி.பி., பள்ளி
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில கையுந்துப்பந்து சங்க துணைத்தலைவர் ரங்கசாமி பங்கேற்றார். கவுரவ விருந்தினராக ஏ.பி.எஸ்., அகாடமி பள்ளி தாளாளர் டாக்டர் சரவணக்குமார் பங்கேற்றார். ஏ.வி.பி., பள்ளி முதல்வர் பிரியாராஜா, ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்று பரிசு, சான்றிதழ் வழங்கினர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.