/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
/
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 13, 2024 01:21 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஓட்டளிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, குறித்த பதாகைகள் ஏந்தியவாறு, மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஸ்கூட்டர்களில் ஊர்வலமாக சென்றனர்.
கலெக்டர் அலுவலகம் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்று, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.