ADDED : ஜூலை 20, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில், ஆடிப்பட்டத்தில், சிறுதானியங்கள் சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு விரைவில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக விளைநிலங்களில் அடியுரம் இடுதல், வரப்பு அமைத்தல், சிறு கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில், உடுமலை சுற்றுவட்டார பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், நடவு உள்ளிட்ட பணிகளை முன்னதாகவே மேற்கொள்ள முடியும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.