/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புவிசார் குறியீடு பெற்ற மறையூர் மலைப்பூண்டு அறுவடை துவக்கம்
/
புவிசார் குறியீடு பெற்ற மறையூர் மலைப்பூண்டு அறுவடை துவக்கம்
புவிசார் குறியீடு பெற்ற மறையூர் மலைப்பூண்டு அறுவடை துவக்கம்
புவிசார் குறியீடு பெற்ற மறையூர் மலைப்பூண்டு அறுவடை துவக்கம்
ADDED : ஆக 03, 2025 08:57 PM

உடுமலை; உடுமலை அருகே, புவிசார் குறியீடு பெற்ற மறையூர் மலைப்பூண்டு அறுவடை துவங்கியுள்ளது.
கேரளா மாநிலம், மறையூர், காந்தலுார், பெருமலை, குகநாதபுரம், குலச்சி வயல், கீழாந்துார், கோவிலுார், கோட்ட காம்பூர், ஊர்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பூண்டுக்கு, மணம், சுவை, மருத்துவ குணம், மற்ற பகுதிகளிலுள்ள பூண்டுகளை விட, சிறந்த தரம் மற்றும் பாரம்பரிய முறையில் இயற்கையான முறையில் விளைவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், இந்த பூண்டுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மே - ஜூன் மாதங்களில் சாகுபடி செய்யப்பட்டு, மூன்று மாதம் சாகுபடி காலமாக கொண்டு, ஆக.,மாதம் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வயல்கள், பசுமையாக காணப்படுகிறது.
கேரளா மாநிலத்தில், ஓணம் பண்டிகை காலமும் துவங்க உள்ளதால், அதனையொட்டி, பூண்டு அறுவடை காணப்படும்.
கடந்தாண்டு, மறையூர் மலைப்பூண்டுக்கு அதிக விலை கிடைத்தது; கிலோ, 500 முதல், 600 ரூபாய் வரை விற்றதால், நடப்பாண்டு கூடுதல் பரப்பளவில் பூண்டு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இப்பகுதிகளில் மலைப்பூண்டு அறுவடை துவங்கியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: கேரளா மாநிலம், காந்தலுார், வட்டவடா என மறையூரை சுற்றியிலுள்ள ஒரு சில பகுதிகளில் மட்டுமே பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் பூண்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளதால், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யும் பூண்டு, தமிழக பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்வதோடு, கேரளா மாநில அரசும் கொள்முதல் செய்து வருகிறது.
மற்ற பூண்டு ரகங்களை காட்டிலும், மலைப்பூண்டுக்கு தனிச்சிறப்பு உள்ளதால், வியாபாரிகளும், மக்களும் அதிகளவு வாங்கி செல்கின்றனர். தற்போது, கிலோ, 250 வரை விற்று வருகிறது. அறுவடை துவங்கி, வியாபாரிகள் வருகை அதிகரிக்கும் போது, விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.