/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி அதிகாரிகள் மறந்துட்டாங்களா? நெரிசலில் சிக்கி தவிக்கும் ஈஸ்வரன் கோவில் வீதி
/
மாநகராட்சி அதிகாரிகள் மறந்துட்டாங்களா? நெரிசலில் சிக்கி தவிக்கும் ஈஸ்வரன் கோவில் வீதி
மாநகராட்சி அதிகாரிகள் மறந்துட்டாங்களா? நெரிசலில் சிக்கி தவிக்கும் ஈஸ்வரன் கோவில் வீதி
மாநகராட்சி அதிகாரிகள் மறந்துட்டாங்களா? நெரிசலில் சிக்கி தவிக்கும் ஈஸ்வரன் கோவில் வீதி
ADDED : செப் 22, 2024 05:53 AM

திருப்பூர், : அதிகளவிலான ஆக்கிரமிப்பால், ஈஸ்வரன் கோவில் வீதி, போக்குவரத்து நெருக்கடியால், பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், காமராஜர்ரோடு, பூ மார்க்கெட் துவங்கி, கிழக்கே செல்லும் ஈஸ்வரன் கோவில் வீதி, தேரோடும் வீதி என்பதை மறந்துவிட்டனர். கடந்தமுறை தார்ரோடு புதுப்பிக்கும் முன்னதாக, ரோட்டின் இருபுறமும் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது.
ரோடு மட்டத்துக்கு, கால்வாய் அமைக்காமல், அவ்வீதியில் உள்ள கடைகளுக்கு வசதியாக, முக்கால் அடி உயரத்தில், கடைகளுக்கு பிளார்ட்பார்ம் போல் அமைக்கப்பட்டது. இதனால், அகலமாக இருந்த ஈஸ்வரன் கோவில் வீதி ரோட்டில், தலா ஐந்து அடி வீதம், 10 அடி சுருங்கிவிட்டது.
இருப்பினும், மாநகராட்சி அதிகாரிகள், ரோட்டின் இருபுறமும் உள்ள, பிளார்ட்பார்ம் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டுகொள்வதில்லை. கடைகளுக்கு வரும் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுவதால், காரில் சென்று வருவோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக, பெருமாள் கோவில் தேர்நிலை அருகே, ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பிளார்ட்பார்ம் வெளியே தெரியாத அளவுக்கு, கடை அமைத்து பூக்கடை நடத்துகின்றனர். போலீசோ, மாநகராட்சி அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை.
இதன்விளைவாக, பண்டிகை காலத்தில், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரிக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்காததால், ரோட்டில் நிறுத்தி கடும் நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, அப்பகுதியில் உள்ள கடைகள், ரோடு கடை ஆக்கிரமித்து கடை அமைத்ததால், வாகனம் சென்று வருவதில் கடும் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சியும் போலீஸ் அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு நடத்தி, பூ மார்க்கெட் துவங்கி ஈஸ்வரன் கோவில் வரையில் உள்ள, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.