/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்-சாண்ட் கழிவுகளால் ஆபத்து; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு
/
எம்-சாண்ட் கழிவுகளால் ஆபத்து; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு
எம்-சாண்ட் கழிவுகளால் ஆபத்து; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு
எம்-சாண்ட் கழிவுகளால் ஆபத்து; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு
ADDED : நவ 08, 2024 11:51 PM
உடுமலை; மடத்துக்குளம் பகுதிகளில், விவசாய நிலங்கள், நீர் நிலைகளில் எம்-சாண்ட் கிரசர் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மடத்துக்குளம் பகுதிகளில் செயல்படும், எம்-சாண்ட் கிரசர் தொழிற்சாலைகளிலிருந்து, அபாயகரமான திடக்கழிவுகளை, கண்ணாடிபுத்துார், அமராவதி சர்க்கரை ஆலை மற்றும் பறைக்குழிகள், குளம், குட்டைகள், ஓடைகள் என நீர் வழிப்பாதைகளில், தொடந்து கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, குடிநீர் அருந்தும் கால்நடைகள் இறந்து வருகின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி, கழிவுகள் வெளியேற்றப்படாத 'ஜீரோ டிஸ்சார்ஜ்' என்ற அடிப்படையில், அனுமதி பெற்று செயல்படும், எம்-சாண்ட் உற்பத்தி ஆலைகள், விதி மீறி பொது இடங்களில், அபாயகரமான திடக்கழிவுகளை வெளியேற்றி வருவதை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தாசில்தார், போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.