/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசாரை திட்டினார்... கம்பி எண்ணுகிறார்!
/
போலீசாரை திட்டினார்... கம்பி எண்ணுகிறார்!
ADDED : நவ 02, 2024 11:02 PM
சுல்தான்பேட்டை: சுல்தான்பேட்டையில் போலீசை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்.ஐ., முத்துகிருஷ்ணன் மற்றும் காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அருகம்பாளையம் பகுதியில் கள் இறக்கப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
அவ்வகையில், கரையாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 47 என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை மேற்கொண்ட போது, கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், செந்தில்குமாரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்ற போது, குடிபோதையில் இருந்த அவர், எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரரை காவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
புகாரின் பேரில், அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.