/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றல் மிக்கவன் விதியை தானே வகுப்பான்... திருப்பூர் குமரன் நினைவு நாள் அனுஷ்டிப்பு

ADDED : ஜன 11, 2024 11:13 PM

திருப்பூர்;திருப்பூர் குமரனின் நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
கொடி காத்த குமரன் என்ற பெயரில் அறியப்பட்டவர் திருப்பூர் குமரன். திருப்பூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் குமரன், சுதந்திர போராட்ட கொடியை கையில் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, போலீசார் நடத்திய தடியடியில் மயங்கி விழுந்தும் அவர் தன் கையில் இருந்த கொடியை விடவில்லை. ஜன., 10ம் தேதி காயமடைந்த அவர் 11ம் தேதி உயிரிழந்தார். அவரது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள அவரது நினைவிடம், குமரன் ரோட்டில் உள்ள நினைவு ஸ்துாபியிலும், நேற்று பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தினர்.திருப்பூர் மாநகராட்சி சார்பில் மேயர் தினேஷ்குமார், குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருப்பூர் குமரன் நினைவு அறக்கட்டளை, சுதந்திர போராட்ட தியாகிகள் சமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.