/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொந்த ஊர் செல்கிறீர்களா... முன்கூட்டியே திட்டமிடுங்கள்
/
சொந்த ஊர் செல்கிறீர்களா... முன்கூட்டியே திட்டமிடுங்கள்
சொந்த ஊர் செல்கிறீர்களா... முன்கூட்டியே திட்டமிடுங்கள்
சொந்த ஊர் செல்கிறீர்களா... முன்கூட்டியே திட்டமிடுங்கள்
ADDED : அக் 19, 2024 11:57 PM
தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ் இயக்கம் குறித்து ஓரிரு நாளில், அறிவிப்பு வெளியாகும். அதை தொடர்ந்து, கோவை கோட்ட அளவிலும், திருப்பூர் மண்டல அளவிலும் சிறப்பு பஸ் இயக்கம் குறித்து தொழில்நுட்பம், இயக்கம், மேலாண்மை என்று மூன்று பிரிவுகளாக கூட்டம் நடைபெறும்.
தென் மாவட்டங்களுக்கு திருப்பூர், கோவில்வழியில் இருந்து பஸ் இயக்குவது; ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, சென்னை, ஒசூருக்கு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து; திருச்சி, கும்ப கோணம், தஞ்சாவூர், சிதம்பரம், மயிலாடுதுறை மார்க்கமாக, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகும்.
வரும், 31ம் தேதி தீபாவளி பண்டிகை என்றாலும், வரும் 26, 27ம் தேதியே சிலர் சொந்த ஊர் செல்லக்கூடும் என்பதால், அன்று முதல் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்காக, மத்திய பஸ் ஸ்டாண்டில் பண்டிகை சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட உள்ளது. இவற்றில், பயணத்துக்கு இரண்டு நாள் முன்பு டிக்கெட் முன்பதிவுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.
ரயில்களில் எப்படி?
கோவை - ஈரோடு மார்க்கத்தில் வழியோர ஸ்டேஷனாக திருப்பூர் உள்ளதால், இங்கிருந்து ரயில்கள் புறப்பட வாய்ப்பில்லை; நின்று, கடந்து செல்லும் ரயில்கள் மட்டும் தான். ஆகையால், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பிரச்னை இல்லை.
முன்பதிவு செய்யாதவர்கள் முன்பதிவில்லா பொது பெட்டியில் நின்று செல்ல இடமிருக்கும் என தேடி அலைய வேண்டி இருக்கும். கோவை மற்றும் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலிக்கு அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் பயணிக்கும் சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களின் இருக்கைகள் நிரம்பி, காத்திருப்பு பட்டியல் நீண்டு வருகிறது. கடைசி நேரத்தில் சொந்த ஊர் செல்ல திட்டமிடும் பயணியர் வசதிக்காக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதே எழுந்துள்ளது.