/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார நிலையம் முற்றுகை போராட்டம்
/
சுகாதார நிலையம் முற்றுகை போராட்டம்
ADDED : பிப் 01, 2024 12:09 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 7வது வார்டு போயம்பாளையம் அடுத்த குருவாயூரப்பன் நகரில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும். கர்ப்பிணிகள் அமர வசதியாக நிழற்குடை அல்லது கூடாரம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் உழைக்கும் மக்கள் முன்னேற்ற நல சங்கம் சார்பில், தலைவர் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். கோரிக்கைகளை சுகாதார துறையிடம் முறையிட கேட்டு கொண்டனர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.