ADDED : மார் 14, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் நொய்யல் கரையில் அமைக்கப் பட்டுள்ள பாதையில் நேற்று ெஹல்த் வாக் 2.0 என்ற பெயரில் நடைப்பயிற்சி நடைபெற்றது.
மாநகராட்சி பகுதிகளில் சுகாதார நடைபாதை திட்டத்தில், 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற தலைப்பில் 'ஹெல்த் வாக் 2.0' நடைப்பயிற்சி நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நொய்யல் கரையை ஒட்டி இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட புதிய ரோட்டில், யுனிவர்சல் சந்திப்பு பகுதியில், மேயர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி, துணை மேயர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி துணை கமிஷனர்கள் சுந்தரராஜன், சித்ரா, நகர் நல அலுவலர் கலைச்செல்வன், கவுன்சிலர் முத்து கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
