/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹெல்த் வாக் ' திட்டம் நொய்யல் கரையோர ரோடு தேர்வு:நடைபயிற்சி தடம் அமைகிறது
/
'ஹெல்த் வாக் ' திட்டம் நொய்யல் கரையோர ரோடு தேர்வு:நடைபயிற்சி தடம் அமைகிறது
'ஹெல்த் வாக் ' திட்டம் நொய்யல் கரையோர ரோடு தேர்வு:நடைபயிற்சி தடம் அமைகிறது
'ஹெல்த் வாக் ' திட்டம் நொய்யல் கரையோர ரோடு தேர்வு:நடைபயிற்சி தடம் அமைகிறது
UPDATED : அக் 28, 2025 01:36 AM
ADDED : அக் 27, 2025 11:14 PM

திருப்பூர்:நடைபயிற்சி பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 'நடப்போம்; நலம் பெறுவோம்' (ஹெல்த் வாக்) திட்டம் சுகாதாரத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, திருப்பூர் நொய்யல் ஆற்றையொட்டிய ரோடு, தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இங்கு, இதற்கான பணிகள் துவங்கவுள்ளது.
தமிழகத்தில், தொற்றா நோய்களை தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், 'நடப்போம்; நலம் பெறுவோம்' திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக எட்டு கி.மீ., துார நடைபயிற்சி தடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட தலைநகரான திருப்பூரில் இதற்காக நொய்யல் ரோடு, தேர்வாகியுள்ளது. இப்பாதையின் இருபுறமும் நிரந்தர நுழைவு வளைவு, ஒரு கி.மீ.,க்கு ஒரு மைல் கல், ஓய்வெடுக்கும் பெஞ்ச், ஒளி தரும் விளக்குகள், குடிநீர், கழிப்பிட வசதி, கழிவுகளை அகற்றும் தொட்டிகள், சுகாதாரம் தொடர்பான காட்சி பலகைகள் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் மாநகராட்சி, மாவட்ட சுகாதாரத்துறை, பொது சுகாதார நலப்பணிகள் துறை இணைந்து இந்த சாலையை பராமரிக்க உள்ளது.
மாவட்ட சுகாதார பணிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நடராஜா தியேட்டர் பாலம் துவங்கி, வளம் பாலம் வரை, எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் சந்திப்பு துவங்கி அணைக்காடு வரை, வளம் பாலம் முதல் மணியகாரம்பாளையம் வரை என மூன்று பகுதிகளாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலம் இச்சாலையில் அடிப்படை உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.நடைபயண துாரம் எட்டு கி.மீ.; துவங்கும் இடத்தில், அதனை குறிப்பிடுவதற்கான, வளைவு அமைக்கப்படும். இச்சாலையில் பணிகள் முழுமை பெற்ற பின், நடைபயிற்சி விழிப்புணர்வு குறித்து பதாகை வைக்கப்படும். பொது சுகாதாரக்குழுக்கள், தன்னார்வலர்கள் மூலம் மாதாந்திர ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்த பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
--
திருப்பூர், செல்லாண்டி அம்மன் துறை, நொய்யல் கரை ரோடு.

