/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காது கேட்புத்திறன் சோதனை; மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் 'சக் ஷம்' அமைப்பு புகார்

ADDED : அக் 30, 2024 12:12 AM

திருப்பூர் : அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆடிரோ கிராம் கருவியை இயக்க நிபுணர் இல்லாததால், கேட்புத்திறன் பரிசோதனைக்காக, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், வெளி மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை தொடர்கிறது.
இது தொடர்பாக, திருப்பூர் சக் ஷம் அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி மற்றும் அமைப்பு நிர்வாகிகள், குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளையும் ஒரே இடத்தில் பரிசோதித்து, உடனடியாக சான்று வழங்குவதில் திருப்பூர் மாவட்டம் முன்னோடியாக உள்ளது. செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் கேட்புத்திறனை பரிசோதிக்க வேண்டியுள்ளது.
இதற்கான ஆடியோகிராம் கருவி, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள் ளது. ஆனால், கருவியை இயக்க பரிசோதனை நிபுணர் பணியிடம் ஆறு மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது.
மருத்துவ கல்லுாரியில் கேட்டால், ஆடியோகிராம் கருவியே இல்லை என்கின்றனர். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள், கேட்புத்திறன் பரிசோதனைக்காக, கோவை மருத்துவ கல்லுாரி அல்லது பெருந்துறை மருத்துவ கல்லுாரிக்கு செல்லவேண்டிய நிலை தொடர்கிறது.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கேட்புத்திறன் பரிசோதனை நிபுணர் பணியிடத்துக்கு தகுதியான நபரை பணி அமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.