/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர்களுக்கு இதய பரிசோதனை முகாம்
/
தொழிலாளர்களுக்கு இதய பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 25, 2025 11:30 PM

திருப்பூர்; ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில், இதய நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப், ரேவதி மருத்துவமனை மற்றும் சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் ஆகியன இணைந்து, இதய நோய் கண்டறியும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தின. விஜயமங்கலம் சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் ஆலை வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது. ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அருள்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர்கள் டாக்டர் பொம்முசாமி, ேஹமந்த் ஜெயின், பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
மேலும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், முகாம் சேர்மன் பாலசுப்ரமணியம்; தொழிற்சாலை நிர்வாக இயக்குநர்கள் அருள் பரத், அருள் பிரனேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில், ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.