தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுமை பணி தொழிலாளர் காத்திருப்பு போராட்டம்

சுமை பணி தொழிலாளர் காத்திருப்பு போராட்டம்

சுமை பணி தொழிலாளர் காத்திருப்பு போராட்டம்


UPDATED : ஜூலை 15, 2026 09:57 PM

ADDED : ஜூலை 15, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 09:57 PM ADDED : ஜூலை 15, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஜனநாயக அங்காடிகள் சுமைதுாக்குவோர் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில நிலைக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்கள் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றனர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மாதம் அதிகபட்சமாக 8,000 ரூபாய் மட்டுமே சம்பளமாகக் கிடைக்கிறது. குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அடிப்படையில் இவர்களைப் பணி நிரந்தரம் செய்து உரிய சம்பளம் வழங்க வேண்டும்.

கடந்த 2020ம் ஆண்டு முதலாக வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களை ஒப்பந்த முறைக்குத் தள்ளாமல், நேரடியாகச் சம்பளம் வழங்க வேண்டும். முன்னதாக தொழிலாளர்கள், 'கஞ்சித்தொட்டி' திறந்தும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us