/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி மலையில் கன மழை அருவி, கோவிலுக்கு செல்ல தடை
/
திருமூர்த்தி மலையில் கன மழை அருவி, கோவிலுக்கு செல்ல தடை
திருமூர்த்தி மலையில் கன மழை அருவி, கோவிலுக்கு செல்ல தடை
திருமூர்த்தி மலையில் கன மழை அருவி, கோவிலுக்கு செல்ல தடை
ADDED : மே 15, 2025 11:43 PM
உடுமலை; உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மதியம், 1:00 மணிக்கு, மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் இருந்த சுற்றுலாபயணியர், பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அதே போல், தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதால், அலாரம் எச்சரிக்கை விடப்பட்டு, கோவில் பணியாளர்களால், பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பாதிப்புகள் இல்லை, என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.