/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உயரம், வயதுக்கேற்ற எடை குழந்தைகளுக்கு அவசியம்'
/
'உயரம், வயதுக்கேற்ற எடை குழந்தைகளுக்கு அவசியம்'
ADDED : ஆக 07, 2025 11:10 PM
திருப்பூர்; அங்கன்வாடிகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, முன் பருவ கல்வி கற்பிக்கப் படுகிறது. மாதந்தோறும், வயதிற்கு ஏற்ற உயரம், வயதிற்கு ஏற்ற எடை, உயரத்துக்கு ஏற்ற எடை கண்டறியப்படுகிறது.
ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், வழக்கம்போல் அளிக்கப்படும் சத்து மாவுடன் இணை உணவும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது:
பிறந்தது முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு உடல் எடை, உயரம் போன்றவை கணக்கிடப்படுகிறது. இதன் வாயிலாக அவர்கள் ஊட்டச்சத்தின் நிலை கண்டறியப்படும். வயதிற்கு ஏற்ற எடை குறைதல் அல்லது கூடுதலாக இருத்தல், வளர்ச்சி குறைந்து இருத்தல் போன்றவை கண்டறிந்து, குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கப்படும். சில பகுதிகளில் பெற்றோர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்கிடவும், குழந்தைகளுக்கு தேவையான உணவு கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பெற்றோருக்கு கற்றுத்தரப்படும்.
குழந்தைகளை தொடர் கண்காணிப்பில் பரா மரித்து அவர்களின் உடல்நிலை சீராகும் வரை ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும்.