நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகிகளைப் போற்றுவோம்
மூவர்ணக் கொடியேற்றி
சுதந்திரத் திருநாளில்
முதல் வணக்கம் சொல்லிடுவோம்
தாய் மண்ணே வணக்கம்!
வண்ணங்கள் பல இருந்தாலும்
துாரிகை ஒன்றுதானே!
பறவைகள் பல பறந்தாலும்
வானம் ஒன்றுதானே!
பன்முகம் நம் தனித்துவம்
தனித்துவம் நம் சுதந்திரம்
வாழ்க நீடூழி
வாழ்க வேரூன்றி
வாழ்க நெடிதோங்கி
வாழ்க நம் தாய்த்திருநாடு