தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஹெல்மெட் கட்டாயம் :மாணவர்களுக்கு கட்டுப்பாடு

ஹெல்மெட் கட்டாயம் :மாணவர்களுக்கு கட்டுப்பாடு

ஹெல்மெட் கட்டாயம் :மாணவர்களுக்கு கட்டுப்பாடு


UPDATED : ஆக 18, 2026 08:23 PM

ADDED : ஆக 18, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 08:23 PM ADDED : ஆக 18, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என, பல்லடம் அரசு கல்லுாரி லூரி நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:

பல்லடம் அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவ மாணவியர், வட்டாரத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். கிராமப் பகுதிகளில் இருந்தும் அதிகப்படியான மாணவர்கள் வருகின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு, கல்லுாரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதனை கருத்தில்கொண்டு, மாணவர்கள் கட்டாயம் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதும் அவசியம். ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஒட்டி வந்தால், கண்டிப்பாக கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது மாணவர்களுக்கு மட்டுமின்றி, கல்லூரிக்கு வரும் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த கட்டுப்பாடை விதித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us