தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புலம்பெயர் தொழிலாளருக்கு உதவி மையம்

புலம்பெயர் தொழிலாளருக்கு உதவி மையம்

புலம்பெயர் தொழிலாளருக்கு உதவி மையம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ‘‘புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது தேவைகள், குறைகள் தொடர்பாக ‘மித்ரா’ உதவி மையத்தை அணுகலாம்’’ என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். ஒடிசா, பீஹார், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்த பலர், கடந்த 5 ஆண்டுகளாக இங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

உள்ளூர் தொழிலாளர்களுடன் இணக்கமாக பழகி வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு, குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் தொழிலாளர் துறை அலுவலகத்துடன் இணைந்து ‘மித்ரா’ உதவி மையம் செயல்படுகிறது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே புலம்பெயர் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். தொழிலாளர் பாதுகாப்பு, அரசு உதவிகள், தொழிலாளர் நலத்துறை சேவைகள் குறித்து விளக்கினார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான உதவி மற்றும் குறைகேட்பு மையமாக ‘மித்ரா’ செயல்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை தவிர, தினமும் காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை மையத்தை தொடர்பு கொள்ளலாம். 94896 76719, 0421–2345100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான உதவி மற்றும் குறைகேட்பு மையமாக ‘மித்ரா’ செயல்படுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us