/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்
/
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்
ADDED : ஆக 04, 2024 05:16 AM

திருப்பூர் : கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில், தீரன் சின்னமலையின், 219ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் தீரன் சின்னமலை படத்துக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது புகழைப் பறைசாற்றினர்.
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில், சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட மாவீரன் தீரன் சின்னமலையின், 219ம் ஆண்டு நினைவு நாள் விழா திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கொங்கு முருகேசன் தலைமை வகித்தார். பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, கவுரவ தலைவர் முருகேசன், துணை தலைவர் ராமசாமி, பொருளாளர் செல்வராஜ், தலைமை நிலைய செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கபடி கழகத் தலைமை புரவலர் சக்தி சுப்ரமணியம், துணை மேயர் பாலசுப்ரமணியம், திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், ம.தி.மு.க., மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ், கபடி கழக செய்தி தொடர்பாளர் சிவபாலன், மாநகராட்சி கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், தம்பி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பங்கேற்றவர்கள் தீரன் சின்னமலைக்கு புகழாரம் சூட்டினர். அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
----
படம் 6 காலம்
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில்திருப்பூர், காயத்ரி திருமண மண்டபத்தில் நடந்த தீரன் சின்னமலை 219ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், மாநில தலைவர் கொங்கு முருகேசன் பேசினார். அருகில் பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி, துணைமேயர் பாலசுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.